முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்...!


எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (12) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமமாலி கொத்தலாவல, இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க ,தற்போது சந்தையில் 50 ரூபாவை விடவும் குறைந்த விலையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதில்லை என தெரிவித்தார்.

பொருளாதார மத்திய நிலையங்களில் குறித்த விலைக்கு குறைவாக முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அந்த விலையில் சாதாரண மக்களுக்கு முட்டைகள் கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post