ஜனாதிபதி - கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்கள் சந்திப்பு...!



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்புஇன்று இடம்பெற்றுள்ளது.

இதன் ​போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் சில விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது, அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினைகள், கிழக்கு மாகாண சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளின் நியமனம், கிழக்கு முஸ்லிம்களின் காணி பிரச்சினை, காத்தான்குடியில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை தொழுகைக்கு அனுமதிக்கும் விவகாரம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

Previous Post Next Post