முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவது தொடர்பான விலைகளை நுகர்வோர் அதிகாரசபையிடம் இந்த வாரம் சமர்ப்பிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று (05) இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு இந்தியாவில் இருந்து சுமார் நான்கு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை இலக்கு வைத்து முட்டையின் விலையை மேலும் அதிகரிக்க சந்தையில் வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த வாரத்தில் முட்டையின் விலையை குறைக்குமாறு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Post a Comment