மாலைதீவில் இருந்து முதல் கட்டமாக 25 இந்திய துருப்புகள் வெளியேறியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்து பவழத்தீவில் நிலைநிறுத்தப்பட்ட 25 இந்திய துருப்புகள் கடந்த மார்ச் 10 ஆம் திகதி வெளியேறியதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டின் மிஹாரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டெம்பரில் பதவிக்கு வந்த ஜனாதிபதி முஹமது முயிசு, மாலைதீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய துருப்புகளை வெளியேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மாலைதீவில் இருக்கும் 89 இந்திய துருப்புகள் மற்றும் உதவிப் பணியாளர்களை மே 10 ஆம் திகதிக்கு மீளப்பெறுவதற்கு இந்தியா இணங்கியது.
இந்தியா தனது வெளியேற்றத்திற்கு தயாராகி வரும் நிலையில் மாலைதீவு கடந்த வாரம் சீனாவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
முயிசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியது தொடக்கம் இந்தியா மற்றும் மாலைதீவுக்கு இடையே முறுகல் நீடித்து வருகிறது.
Post a Comment