G.C.E. (O/L) பரீட்சைகளை தரம் 10 இலும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை தரம் 12 இலும் நடத்த நடவடிக்கை...!


தரம் 11 இல் நடத்தப்படும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை தரம் 10 இல் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தரம் 13 இல் நடத்தப்படும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை தரம் 12 இல் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.இதேவளை , பாடசாலைகளின் 1 ஆம் தர வகுப்புகளுக்கு முன்னதாக , குழந்தைகளுக்காக விளையாட்டு வகுப்புகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி காரியாலயங்களை 120 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் தற்போது நாடளாவிய ரீதியில் 100 வலயக் கல்வி காரியாலயங்கள் மாத்திரமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post