சமையல் எரிவாயு விலை குறையும்...!



எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால், உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு லீட்டர் எரிவாயு சிலிண்டர் ரூ.135 குறைக்கப்பட்டது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,115 ஆகும்.

5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.55 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.1,652.

2.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.23 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.772.

Post a Comment

Previous Post Next Post