இது குறித்து பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நீண்டகால விடுமுறையை தொடர்ந்து சிறுவர்கள் அதிகமாக உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொண்டு வருகின்றனர். இதனால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு தண்ணீருடன் மலம் வெளியேறுதல், அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுதல், வயிற்றுப் பிடிப்பு, பசியின்மை மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளும் தென்படும். பெற்றோர்கள் சிறுவர்களுக்கு வழங்கும் உணவு குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் இறப்புக்கு வயிற்றுப்போக்கு இரண்டாவது முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment