IPL தொடரிலிருந்து க்லென் மெக்ஸ்வெல் ஓய்வு...!



இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறான மனநிலையில் தன்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என அணித்தலைவர் டூபிளஸிஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post