ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை..!


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு விவாதங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதன்படி, ஜூன் 27-ம் திகதி முதல் விவாதம் CNN-ல் ஒளிபரப்பாகும் என்றும், நேரடி பார்வையாளர்கள் இல்லாமல் அட்லாண்டா ஸ்டுடியோவில் இருந்து விவாதம் ஒளிபரப்பப்படும் என்றும் கேபிள் நியூஸ் நெட்வொர்க் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 10 ஆம் திகதி இரண்டாவது ஜனாதிபதி விவாதத்தை பார்வையாளர்கள் இல்லாத ஸ்டுடியோவில் நடத்துவதாக ஏபிசி நியூஸ் கூறியுள்ளது.

வெள்ளை மாளிகையை வெல்வதற்கான போட்டியில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் முக்கிய விவாதத்தை நடத்துவார்கள் என்று வர்ணனையாளர்கள் கூறுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post