கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்க காலக்கெடு...!


எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவுகள் இம்மாதம் முதலாம் திகதி வழங்கப்படவிருந்த போதிலும் மின்சார சபை அதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post