Indian 2 Kamal Haasan Salary : பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக கமல்ஹாசன் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் தெரியுமா?
இந்தியன் 2 திரைப்படம் ஒரு வழியாக பல்வேறு இன்னல்களை தாண்டி இன்று வெளியாகி இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்பினை கொண்டிருக்கின்றனர். இப்படம், ஜூலை 12ஆம் தேதியான இன்று வெளியாகியிருக்கிறது.
102 வயது தாத்தாவாக உலக நாயகன்!
தமிழ் திரையுலகில், சினிமாவிற்காகவே வாழ்ந்து-ஒரு காட்சிக்கு எந்த அளவிற்கு உழைப்பு பாேட முடியுமோ அந்த அளவிற்கு முயற்சி எடுத்து நடிப்பவர் கமல்ஹாசன். இந்தியன் படத்தில் சேனாபதி-சந்துரு என்ற தந்தை மகன் இரட்டை வேட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர் இதில் 102 வயது முதியவராக நடித்திருக்கிறார். ஆனால், அது துளியளவு கூட தெரியாத அளவிற்கு சண்டை காட்சிகளில் எல்லாம் கலக்கி இருக்கிறார்.
தாத்தா கதறவிட்டாரா?
இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதில் “தாத்தா வராறு கதற விடப்போறாரு” பாடல் இடம் பெற்றிருந்தது. இன்று, படம் வெளியாகியிருப்பதை தொடர்ந்து இதை வைத்தே பலர் படத்தை ட்ராேல் செய்து வருகின்றனர். “தாத்தா வில்லன்களை கதற விட்டாறா..அல்லது ரசிகர்களை கதற விட்டாறா..?” என பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். தற்போது வந்திருக்கும் விமர்சனங்களின் படி, படம் கொஞ்சம் சுமாராகத்தான் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கமலின் சண்டை காட்சிகள் நன்றாக வந்திருப்பதாகவும், க்ளைமேக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியன் 3 படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதுவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
கமல்ஹாசனின் சம்பளம்:
தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் கமல்ஹாசன். பல மாெழி படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் மொழி படங்களில் நடிப்பதை மட்டுமே முதன்மையாக வைத்திருக்கிறார். இவர், இந்தியன் 2 படத்திற்காக சுமார் ரூ.150 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர், கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி படத்திற்காக சுமார் ரூ.100 கோடியை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2 நடிகர்-நடிகைகள்:
இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த இவர் தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்தியன் 2வில் இடம் பெற்றிருந்த மறைந்த நடிகர்கள்:
இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில், ஒரு சிலரின் காட்சிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தது.
Post a Comment