இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்துள்ளது.
அவற்றில், விளையாட்டு வீரர்கள் நாணய சுழற்சி, தேசிய கீதம், விருது வழங்கல், செய்தியாளர் சந்திப்பு மற்றும் புகைப்படம் எடுக்கும் போது அணிகளுக்கான உடையை கட்டயாமாக அணிந்திருத்தல் வேண்டும். காற்சட்டை மற்றும் காலணி (செருப்பு) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது கையடக்க தொலைப்பேசி பயன்படுத்துவதற்கும் இரவில் திரைப்படங்கள் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் கிரிக்கெட் அமைப்பின் அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment