நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் (Wickramabahu Karunaratne) இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.
பொரளை (Borella)– பொதுமயானத்தில் இன்று (27.7.2024) பிற்பகல் 5 மணிக்கு இறுதிக் கிரியை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன கடந்த புதன் கிழமை காலமானார்.
அத்துடன் இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறிவந்திருந்திருந்தார்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
Post a Comment