குக் வித் கோமாளி, வயிறு வலிக்க சிரிக்க ரெடியா பங்காளி என்ற கான்செப்சோடு உருவாகிய நிகழ்ச்சி இது. முதல் சீசன் சாதாரணமாக தொடங்கப்பட அதுவே பெரிய ஹிட்.
எனவே தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வந்தது, தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 5வது சீசனில் தயாரிப்பு குழு மாற அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் மாற்றம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த 5வது சீசனிற்கு வழக்கம் போல் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
தற்போது குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது.
போட்டியாளர்களின் உறவினர்கள் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர், அதுவே ஸ்பெஷல் தான், அதையும் தாண்டி இப்போது டாப் நடிகர் மற்றும் நடிகை கலந்துகொண்டுள்ளனர்.
அதாவது நடிகர் நானி மற்றும் பிரியங்கா மோகன் தாங்கள் நடித்துள்ள Saripodhaa Sanivaaram படத்தை புரொமோட் செய்ய இருவரும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.
நானியை நிகழ்ச்சியில் பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் செம குஷி. இதோ அவர் நிகழ்ச்சிக்கு வந்துள்ள புரொமோ,
Post a Comment