5 மொழிகளில் வெளியாகிறது ஜோஜு ஜார்ஜ் இயக்கிய ‘பனி’....!


பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். தமிழில், ‘ஜகமே தந்திரம்', ‘பபூன்’ படங்களில் நடித்துள்ள இவர், தற்போது கமலின் ‘தக் லைஃப்' படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் மலையாள படம், ‘பனி’. கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.

ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடித்துள்ள இதில் அபிநயா அவர் மனைவியாக நடித்துள்ளார். சாகர் சூர்யா, சீமா, சாந்தினி தரன் என பலர் நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. மலையாளத்தில் உருவான ‘பனி’, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் வெளியாக இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post