'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது. கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' என்ற பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.
அதில் இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார். 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. ஓனம் பண்டிகை ஸ்பெஷலாக இப்பாடலை படக்குழு வெளியிடவுள்ளனர். பாட்டின் இந்த கிலிம்ப்ஸ் காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Chettan Vannalle , Vettaiyan alle 😎🤘🏽❤️🔥#Manasilaayo from 5️⃣ PM tomorrow in the voice of legendary #MalaysiaVasudevan ❤️🥳#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/fFfIGWk2WU
— Sony Music South India (@SonyMusicSouth) September 8, 2024
Post a Comment