ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவில் எந்த மாற்றங்களும் இல்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது. சஜித் பிரேமதாசவைத் தவிர ஏனைய எந்த வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லையெனவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டா தெனவும் கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதானிகள் குழு அண்மையில் கூடி இந்த முடிவை உறுதி செய்ததாகவும் சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமுலாக்குவது குறித்தே தற்போது ஆராயப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறித்த பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment