சிம்புவுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர துணை முதல்வர்...!


ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள், ட்ரொன்கள், ஹெலிகாப்டர் மூலம் அரசாங்கம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வர்களின் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வருகின்றனர். அந்த வகையில் ஜுனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் இரண்டு மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் கொடுத்தனர்.

இதையடுத்து தமிழ் சினிமாவில் இருந்து முதல் நடிகராக சிம்பு, ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். இந்த நிலையில் சிம்புவின் உதவிக்கு நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் எக்ஸ் பதிவில், “இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்” எனக் குறிப்பிட்டிருந்தார். பவன் கல்யாண் நன்றிக்கு சிம்பு நன்றி தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post