காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 65 கிலோமீற்றர் வரையிலும், மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பிலிருந்து காலி வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 55 கிலோமீற்றர் வரையிலும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மீனவ மற்றும் கடல்வாழ் மக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment