தற்போதைய ஜனாதிபதி தொடர்பில் டக்ளஸ்…!


தற்போதைய ஜனாதிபதி தொடர்பில் தங்களது தரப்புக்கு சிறந்த புரிந்துணர்வு இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை மாவைகலட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி தொடர்பில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது.

எங்களுடைய மக்களின் பிரச்சினை தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளோம்.

எனினும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே இந்த கலந்துரையாடல்களை எதிர்பார்த்துள்ளோம். ஆரம்பிக்க

தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆரம்ப கால கட்டங்களில் ஜே.வி.பியான ஆயுதப்போட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பி தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

நாங்களும் ஆரம்பக் காலங்களில் ஆயுதம் ஏந்தி போராடி, பின்னர் ஜனநாயக வழியைத் தேர்வு செய்தோம்.

அவர்களும் நாங்களும் இடதுசாரி பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் இரு தரப்புக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post