குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவு...! முழு விபரம்


குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாதது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இ-விசா முறையை அமுல்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை அண்மையில் பிறப்பித்தது.

Post a Comment

Previous Post Next Post