இஸ்ரேலில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையர்…!


இலங்கையர் ஒருவர் இஸ்ரேலில் பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்டதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படும் என தூதுவர் பண்டார உறுதிப்படுத்தினார்.

குறித்த நபர் ஆறு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு வந்து விவசாயத் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

சடலத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக தூதுவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post