சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பாகிஸ்தானுக்குக் கடன் உதவி…!


(IMF) சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டொலர்களுக்கான கடன் ஒப்புதல் அளித்துள்ளது.

கடனில் முதல் 1 பில்லியன் டாலர் உடனடியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும், மீதமுள்ளவை அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்படும்.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இந்த முடிவை வரவேற்றுள்ளதோடு, IMF தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் 1958 முதல் IMF இலிருந்து 20 க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்றுள்ளது மற்றும் தற்போது அதன் ஐந்தாவது பெரிய கடனாளியாகவும் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post