தமிழக துணை முதல்வராக உதயநிதி…!


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும், தமிழக அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் திணைக்களங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மதிவேந்தன் - ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார்.

அவருக்கான திணைக்களம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது எனவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.



Post a Comment

Previous Post Next Post