எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று (28) பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க விடயங்கள் தொடர்பான இரண்டு கலந்துரையாடல்கள் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றன.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதி மாவட்ட செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி ஆணையாளர்கள், பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
Post a Comment