அடுத்துவரும் 36 மணித்தியால காலநிலை எச்சரிக்கை…!


அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் காலநிலை எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் பலத்த மழையானது இன்று முதல் படிப்படியாக குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. வட மாகாணத்திலும் , திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post