இஸ்ரேலிய தலைநகர் மீது ஹமாஸ் ரொக்கட் தாக்குதல்…!

இஸ்ரேலிய தலைநகர் மீது ஹமாஸ் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காசாவின் கான் யூனிஸ் பகுதியிலிருந்து ஐந்து ரொக்கட்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்டதை ஹமாஸ் உறுதி செய்துள்ளது.

அயோலொன் நெடுஞ்சாலையில் வெடிப்புச்சத்தங்களை கேட்டதாக பிபிசி செய்தியாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் காயமடைந்தனர் என இஸ்ரேலின் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை இரண்டு இஸ்ரேலிய படையினருக்கு எதிராக ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்லெபனானின் மருன் அல் ரஸ் பார்க் -ஜல் அல் அலாமில் இஸ்ரேலிய படையினரை இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post