பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் - உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்…!


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு.அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .

இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post