2022ம் ஆண்டில், கேன் வில்லியம்சனுக்கு பின்னர் டெஸ்ட் அணியின் தலைவராக டிம் சவுத்தி நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் 14 டெஸ்ட் போட்டிகளில் 6 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் நியூசிலாந்து அணி சந்தித்துள்ளது.
அத்துடன், 2 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
இந்தநிலையில், அண்மையில் காலியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது.
நியூசிலாந்து அணி இந்த மாத இறுதியில் இந்திய அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்தநிலையில், நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டொம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னதாக 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் 9 போட்டிகளில் நியூசிலாந்து டெஸ்ட் அணிக்குத் தலைவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment