பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கத்தினருக்கு இடையில் இந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
அதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“.. அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பான விடயங்களை அவர் கேட்டறிந்து கொண்டார்.
எனினும் அதற்கான பதிலை அவர் வழங்கியிருக்கவில்லை.
எதிர்வரும் வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் இது தொடர்பான தீர்வுகளை முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சரான பிரதமர் தெரிவித்தார்..” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment