இணையதளம் ஊடாக பலவழிகளில் மோசடி அதிகரிப்பு - உஷார்…!


இணையதளம் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி வர்த்தகம் தொடர்பில் இந்த மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் 230க்கும் அதிகமான முறைப்பாடுகள் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இணையத்தள கணக்குகளின் பாதுகாப்பு தொடர்பில் வங்கி மூலம் விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றாமை காரணமாகவே இவ்வாறான வர்த்தக மோசடிகளில் சிக்கிக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தள நிதி வர்த்தகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் இதுவரை 50க்கும் அதிகமான சீன பிரஜைகள் கைதாகினர்.

பாணந்துறை, நீர்கொழும்பு, கம்பஹா ஆகிய பகுதிகளில் வைத்து அண்மையில் சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதானவர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் மடிக்கணினிகள், உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. பல

கைதானவர்கள் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Post a Comment

Previous Post Next Post