திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பம்…!


எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post