சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் விசேட செய்தி என்ன..?



உலகளாவிய ரீதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக நாட்டின் அழகை கண்டு ரசிக்கலாம் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் போது அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சும் எடுத்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post