தர்மபுரியில் களமிறங்கும் விஜய்...!!


2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி அரசியலில் கால் பதித்தார்.

இதனைத்தொடர்ந்து தவெகவின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாணி வி.சாலையில் நடைபெற்றது. அதில் தன் கட்சியின் குறிக்கோள், கொள்கைகள், செயல்திட்டம், கொள்கைத்தலைவர்கள் யார், அரசியல் எதிரிகள் யார் யார் என்பதையெல்லாம் விஜய் தெரிவித்திருந்தார். மேலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் காணப்போவதாகவும், நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் விஜய் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று தர்மபுரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் பேசிய தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் எனக் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post