அநுரவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு - புதிய அமைச்சர்களுக்கு ஏமாற்றம்


அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை சுமந்திரன் பெறவுள்ளதாக தகவல் | Anura Governments Foriegn Minister Sumanthranபொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு அரச இல்லங்கள் வழக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

புதிய அமைச்சரவையில் 25இற்கும் குறைவான அமைச்சர்களே செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுவரை காலமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு கொழும்பில் அரசாங்க வீடுகள் வழங்கப்பட்டு வருவது வழமை.

எனினும் அடுத்து வரும் அரசாங்கத்தில் அந்த சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி, அமைச்சர்களை அரச ஊழியர்களாக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் பெருமளவில் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டு, நாட்டின் அபிவிருத்திக்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பரப்புரைகளின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post