இனறைய தங்க நிலவரம்...!



நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் இன்று (22) சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 213,000 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,500 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 212,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,685.8 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post