மக்களின் தெரிவை ஏற்றுக்கொண்டார் - சுமந்திரன்...!


மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில் எந்த கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்ததில்லை. 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் கூட மூன்றில் இரண்டு பெருபான்மை கிடைக்கவில்லை. கட்சி தாவல்கள் மூலமே அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றனர்.

ஆனால் இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதனை தாண்டி 173 ஆசனங்களை பெற்றுள்ளனர். இதொரு உயர் தகு வெற்றியாகும்.

Post a Comment

Previous Post Next Post