NDF வுடைய தேசியப் பட்டியல் ஆசனம் - ரவி கருணாநாயக்க்கு என தகவல்...!



இலங்கையின் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக ரவி கருணாநாயக்கவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கான பெயரை புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைபெற்ற பொதுத் தேர்தலினூடாக புதிய ஜனநாயக முன்னணிக்கு 3 ஆசனங்களும், 2 தேசியப் பட்டியல் ஆசனங்களும் கிடைக்கப்பெற்றன.

இந்த நிலையில் குறித்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில், ஒன்றுக்காக ரவி கருணாநாயக்கவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post