2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை கடந்துள்ளது...!



2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த தம்பதியரே அந்த இலக்கை அடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

டிசம்பர் முதல் பாதியில் மாத்திரம் மொத்தம் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post