ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் பேருந்து பள்ளத்தில் - 3 பேர் பலி ; பலர் காயம்..! (Video)



ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இன்று (21) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ் விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 
Video: Adaderana
நன்றி..!

Post a Comment

Previous Post Next Post