பெண்களிற்கு வேலைவாய்ப்பை வழங்கும் அரசசார்பற்ற அமைப்புகளை மூடுவோம் - தலிபான் எச்சரிக்கை...!



ஆப்கானில் பெண்களிற்கு வேலைவாய்ப்புவழங்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அரசசாபற்ற நிறுவனங்களையும் மூடப்போவதாக தலிபான் அறிவித்துள்ளது.

ஆப்கானில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஆப்கான் பெண்கள் இஸ்லாமிய முறைப்படி ஒழுங்காக முகத்தை மறைக்காததால் அவர்களிற்கு வேலைவாயப்பினை வழங்குவதை நிறுத்துமாறு இரண்டு வருடங்களிற்கு முன்னர் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே தலிபான் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆப்கான் பெண்களிற்கு வேலைவாய்ப்பை வழங்குவதை நிறுத்தாவிட்டால் அரசசார்பற்ற அமைப்புகளிற்கான அனுமதி இரத்துசெய்யப்படும் என தலிபானின் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் ஆப்கானில் பெண்களிற்கான வேலைவாய்ப்புகள் உட்பட அவர்களிற்கான இடம் மிகவும் குறுகியுள்ளது என தெரிவித்துள்ள ஐநா தலிபான் தனது கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரைவாசிக்கும் மேற்பட்ட மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் வறுமையின் கீழ் வாழும் நாடு குறித்து நாங்கள் பேசுகின்றோம் என்பதுகுறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம், இவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டு வறுமையி;ல் சிக்குண்டுள்ளவர்கள் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என ஐநா பேச்சாளா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post