தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை...!



தென்கொரிய ஜனாதிபதி யூன்சிக் இயோலிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்கொரிய நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றவியல்பிரேரணைக்கு ஆதரவாக 204 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

தென்கொரிய ஜனாதிபதி சில வாரங்களிற்கு முன்னர் மார்ஷல் சட்டத்தை பிரகடனம்; செய்தமை( பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது) அந்த நாட்டில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையிலேயே எதிர்கட்சிகள் அவருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை இரண்டாவது தடவையாக கொண்டுவந்தன.

Post a Comment

Previous Post Next Post