இன்றைய வானிலை வானலை...!



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் என்றார்

Post a Comment

Previous Post Next Post