சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிப்பு தொடர்பில்...!



சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்று சுங்க வருமான கண்காணிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 24 மில்லியன் ரூபா பெறுமதியான Toyota Prius ரக சொகுசு கார் ஒன்றே கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னரில் இருந்து இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த இரண்டு மாதங்களில் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகன உதிரிப்பாகங்கள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (07) ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

Post a Comment

Previous Post Next Post