எரிபொருள் விலை உயர்வு பற்றி...!



எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Sipetco எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.311 ஆக இருந்த 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ.309.00 குறைக்கப்பட்டுள்ளது.

283 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

மேலும், ரூ.183 ஆக இருந்த மண்ணெண்ணெய் விலை ரூ.188.00 ஆக அதிகரித்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371.00 ஆக இருந்ததுடன், எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

Post a Comment

Previous Post Next Post