பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை என்ற உத்தரவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் – ரஷித் கான்...!



ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியைப் கற்க தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை” என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post