Photo: மக்கா சென்ற விமானம், இலங்கையில் விபத்துக்குள்ளாகி 50 வருட பூர்த்தி...!



இலங்கை வரலாற்றில் மிக மோசமான விமான விபத்து இடம்பெற்ற 50 வருட பூர்த்தியை ஒட்டி, நோட்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில், விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூட்டி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மற்றும்முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

டிசம்பர் 4, 1974 அன்று, மார்ட்டின் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான DC 08 விமானம் இந்தோனேசியாவின் சுரவேயார் விமான நிலையத்திலிருந்து மக்காவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் இரவு 10:10 மணியளவில், நோட்டன் பிரிட்ஜ் ஏழு கன்னியர் மலை உச்சியில் மோதியதில் அதில் பயணித்த 182 பேர் மற்றும் 09 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

Post a Comment

Previous Post Next Post