21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேற்றம்...!



21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது என்றும் திறன் நிறைந்தவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நடந்த 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் உரையாற்றும் போதே அவர்
இதனை தெரிவித்துள்ளார்

அத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் நான் பல உலகத்தலைவர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரும் அவர்கள் நாட்டிலுள்ள இந்திய புலம்பெயர்ந்தோரைப் பாராட்டுகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான சமூக காரணம் நீங்கள் கொண்டுள்ள சமூக மதிப்புதான் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post