கேஸ் சிலிண்டருக்குள் போதைப்பொருள்...!



போதைப்பொருளை கேஸ் சிலிண்டருக்குள் மறைத்து வைத்து இடம்பெற்று வந்த வர்த்தகத்தை பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். வெலிபென்ன கட்டுகஹாஹேன பகுதியில் வீடொன்றில் இந்த வர்த்தகம் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் பொலிசார் இந்த வீட்டை சோதனையிட்ட போதிலும் போதைப்பொரள் வர்த்தகம் தொடர்பிலான தகவல்களை வெளிக்கொணர முடியாமல் இருந்தது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து நடத்திய சோதனையில் வீட்டிலிருந்து போதைப்பொருள் மணம் வெளிவந்ததையடுத்து போதைப்பொருட்கள் கேஸ் சிலிண்டருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post