காலி மைதான நுழைவு வாயிலில் ஷேன் வோர்ன்...!



இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் வோர்ன்-முரளி டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக, சுழல் ஜாம்பவான்களான ஷேன் வோர்ன் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு பதாகை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சி கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களின் அசாதாரண சாதனைகளை கெளரவிக்கிறது.

பதாகையில் தங்கள் கையொப்பங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்கள் தங்களது கெளரவங்களை இரு முன்னாள் வீரர்களுக்கும் செலுத்தலாம்.

இந்த தொடருக்கான சர்வதேச வர்ணனையாளராக தற்போது பணியாற்றி வரும் இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹரூப் தனது கையொப்பத்தை பதாகையில் முதன்முதலில் பதித்தார்.

Post a Comment

Previous Post Next Post